நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வனவிலங்கு கள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருகின்றன. இந்த நிலை யில் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 5 காட்டு யானைகள்அப்பகுதிகளில்உலா வருகின்றனர். இதுகுறித்து பல முறை வனத்துறையிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் எந்தவித பயணம் இல்லை.
இந்நிலையில் கெங்கரை, மந்தட்டி, சார்ந்த ராஜு என்பவரின்மனைவி நிர்மலா 53,மற்றும் இரண்டு பெண்கள் கிராமத்தின் அருகில் தேயிலை பறிக்க சென்றபோது திடீரென அப்பகுதியில் வந்த ஒற்றைக் காட்டு யானை நிர்மலாவை தாக்கி மிதித்ததில் அவர் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். அருகில் இருந்த இரு பெண்கள் அதிஷ்ட வசமாக தப்பித்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு யானையை வனத்துறை உதவியுடன் விரட்டினார்கள் பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேதத்தை கோத்திகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக் காக கொண்டு சென்றனர்.
இறந்த நிர்மலாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள்உள்ளனர். அவர்களுக்கு திரு மணம் ஆகிவிட்டது. மேலும் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C .விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment