நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு ரயில் துவக்கம்
நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு இடத்திலிருந்து இடத்திற்கு வந்து அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது இதன்படி குன்னூரில் இருந்து உதகை வரை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 7ம் தேதிகளிலும் ஓணம் பண்டிகை ஒட்டி 14மற்றும் 15ஆம் தேதிகளிலும் சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளது இதன் பெயரில் குன்னூரில் இருந்து உதகைக்கும் உதகையிலிருந்து குன்னூர்க்கும் தலா ஒரு முறை சிறப்பு ரயிலும் உதகை கேத்தி இடையே இந்த விடுமுறை நாட்களில் மூன்று முறை சிறப்பு சுற்று ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment