உதகையில் துவங்கிய கூடைப்பந்து போட்டி
நீலகிரி மாவட்டம் உதகையில் துவங்கிய மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். நீலகிரி மாவட்டம் கோடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு கூடை பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவர்களிடையே நடைபெறும் கூடைப்பந்து போட்டிகளை மாவட்ட கோடைப்பந்து சங்கத் தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார் ஆண்கள் பெண்கள் என தனித்தனி பிரிவாக நடைபெறும் இந்த போட்டியின் இறுதிப்போட்டி நாளை மாலை நடைபெறும் இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளை வழங்கி கௌரவிக்கப்படும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment