கூடலூரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் வைத்து கார்பென்டர் யூனியன் பொதுக்குழு கூட்டம் ஜானகி அம்மாள் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 27 September 2024

கூடலூரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் வைத்து கார்பென்டர் யூனியன் பொதுக்குழு கூட்டம் ஜானகி அம்மாள் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது



 இந்த நிகழ்ச்சி சங்க தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார் துணை செயலாளர் மல்லியராஜ் தொகுத்து வழங்கினார் .சங்க பொது செயலாளர் அசோக் குமார் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் செயலாளர் சிவராமன். துணைத் தலைவர் மணிகண்டன் இணை  தலைவர் சைனுல் ஆபிக்.   வரவு செலவு கணக்கை  பொருலாளர் புஷ்பராஜ் உன்னிகிருஷ்ணன் வாசித்தளித்தனர் இந்த கூட்டத்தில்   கார்பென்டர்கள் மட்டும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...


நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கார்பென்டர்கள்  சங்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர் இவர்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில்  உள்ளவர்கள்  மரத்தினால் செய்யக்கூடிய தட்ச்சு தொழில் பாலிஷ் வேலை .மர சிற்ப வேலை .குத்தூசிவேலை செய்து வருகிறார்கள் .பல வருடங்களாக இவர்கள் தொழில் புரிந்து வந்த நிலையில் தற்போது வெளி மாநிலத்தில் சேர்ந்தவர்களை கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பணியில் செய்ய அமர்த்தி வருகின்றார்.


 இதனால் உள்ளூர் கார்பென்டர்களுக்கு வேலை மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது .இதனால் வேலை செய்யக்கூடிய கார்பெண்டர் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை  மிகவும்  பாதித்து வருகிறது.  மேலும் கார்பென்டர்கள் வெளியூரிலிருந்து உள்ளூரில் பணி செய்யக்கூடிய வேலைகள் அவர்களுக்கு வழங்கி வருவதோடு இவர்களுக்கு வேலை தர மறுப்பதன் காரணமாக இவருடைய பணிகள் முற்றிலும் முடங்கி வருவதோடு இவருடைய வாழ்க்கை தரம் மிகவும் பின்னடைந்து வருகிறது..


மேலும்   இந்த கூட்டதீர்மனத்தில்  வெளி மாநிலத்தில் இருந்து உள்ளூரில் பணி செய்து அந்த பணியினை தொடர்ந்து செய்யாமல் கிடப்பில் போடப்பட்ட பணிகளை தங்களை செய்ய வைக்க கூடாது எனவும்.. தங்களுக்கென்று உள்ளூர் சார்ந்தவர்கள் எங்களை பணியில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும்.. இது போன்று வெளியூரில் இருந்து உள்ளூரில் வேலை செய்யக்கூடிய கார்பென்டர் உடைய நிலைமை எடுத்துக் கூறி உள்ளூரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் கட்டிட பணியாளர்கள் போன்றோர் தங்களுக்கு பணி கிடைக்க செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்குவதற்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மேலும் வெளியூரிலிருந்து உள்ளூர் செய்யப்பட்ட வேலைகளின் கிடப்பு பணிகளை எங்களை செய்ய வைக்க கூடாது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. உள்ளூர் வாசிகள் முழுமையாக அனைத்து வேலைகளையும் எங்களுக்கு தந்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

No comments:

Post a Comment

Post Top Ad