இரங்கல் தெரிவிக்காத காங்கிரஸ் மாவட்ட தலைவர்- வருத்தத்தில் ஊர் மக்கள், மற்றும் கட்சியினர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

இரங்கல் தெரிவிக்காத காங்கிரஸ் மாவட்ட தலைவர்- வருத்தத்தில் ஊர் மக்கள், மற்றும் கட்சியினர்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரகனி ஓடேன் பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜர் காலம் முதல் அதிகம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 15.9.2024 அன்று கீழ் ஓடேன் ஹட்டியை சேர்ந்த முன்னாள் சேவாதள உறுப்பினர் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியும் காங்கிரசே உயிர்மூச்சு என வாழ்ந்துவந்தவருமான திரு. J. ராஜூ அவர்கள் இறைவனடி சேர்ந்தார். 

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணேஷ் அவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை மற்றும் ஒரு இரங்கல் கூட வெளியிடவில்லை என வருத்தமாக இருப்பதாக ஓடேன் ஊர் பொதுமக்கள் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோத்தகிரி வட்டார காங்கிரஸ் துணை தலைவர் ஓடேன் ரவி அவர்கள் கட்சிக்காரர்கள் கோபம் அடைந்துள்ளனர் என  காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கு  கன்டன கடிதம் அனுப்பியுள்ளார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad