இரவு நேரங்களில் ஓடும் ஜேசிபிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 September 2024

இரவு நேரங்களில் ஓடும் ஜேசிபிகள்


 நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் இருக்கும்போது நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்கள் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகத்திடம் முழுமையாக அனுமதி பெற்று இருக்க வேண்டும். மேலும் யார் வாகனங்களை ஓட்டினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுத்து வந்தனர். அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் மாற்றத்தினால் தொடர்ந்து ஜேசிபிகள் அனுமதி இல்லாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் கவனிப்புடன் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தனர்.


 மேலும் கோத்தகிரி பகுதிகளில் இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் ஈளடா அரவேனு தப்பக்கம்பை மற்றும் பல்வேறு பகுதிகளில் எந்தவித அனுமதி இல்லாமல் இரவு நேரங்களில் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது இதனால் கிராமவாசிகள் இரவில் தூக்கமின்மை ஏற்படுகிறது என்று மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஜேசிபி உரிமையாளர்களுக்கு  தொடர்ந்து இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் ஓட்டுவதும் கல் உடைப்பதும் என அரங்கேறி வருகின்றது மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad