நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் அமைந்துள்ள சல்லிவன் நினைவு பூங்கா செப்டம்பர் 2 திங்கட்கிழமை அன்று தமிழக மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர்செல்வம், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் பயண்பாட்டுக்கு திறந்து வைத்தார்கள்.
உடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் செல்வி. அபூர்வ இ.ஆ.ப., தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., கன்னேரிமுக்கு ஊர்தலைவர் திரு.K.ஹாலாகவுடர், கவண்டிக்கை திரு. அண்ணாதுரை, திரு. ராஜேந்திரன், திரு. கோபாலகிருஷ்ணன், திரு. கக்கி சண்முகம் அவர்கள் உடன் இருந்தனர். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை உயர் அலுவலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் உள்ளூர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
10.02 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு சல்லிவன் நினைவு பூங்காவில் இருந்து ரபார்த்தால் தேயிலை தோட்டங்கள் உடன் கூடிய பசுமை பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்கலாம். பல்வேறு பூச்செடிகள் குழந்தைகள் விளையாடும் பகுதி பார்க்கிங் வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலென புல்தரை சில் காற்று ஆகியவை சுவிட்சர்லாந்தை நினைவுகூர்வதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறினார்கள்.
வரும் ஆண்டு காய்கறிகள் கண்காட்சியை நடத்த சிறந்த இடமாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment