பந்தலூரை அடுத்துள்ள தேவாலா சென் பிசீஸ் திருமண மண்டபத்தில் வைத்து மழையினால் பாதிக்கப்பட்ட பந்தலூர் வட்டத்திற்குட்பட்ட மகளீர் கூட்டமைப்பிற்கு உதகை சேவா சங்கத்தின் மூலம் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு உதகை சேவாசங்கத்தின் இயக்குனர் பாதர் ஜான் ஜோசப் தனீஸ் தலைமை தாங்கினார். உதகை சிவா சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரபா வரவேற்பு நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளராக நெல்லியாள நகர மன்ற உறுப்பினர் ஆழன் கவுன்சிலர் இந்திராணி. வியாபார சங்க தலைவர் சசிகுமார்.தேவாலா பகுதி அமைப்பாளர்கள் பாக்கியவதி சுந்தரி கூடலூர் அமைப்பாளர் லதா.மற்றும் சேவா சங்கத்தின் குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..
இந்த நிகழ்ச்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழையினால் பல்வேறு பகுதிகளில் நிலைச்சிறுவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்த இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளனர் அச்சமயம் இப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்த சூழலில் தற்போது இந்த நிகழ்வினை இன்றைய தினம் தேவாலா சென்ட் தாமஸ் திருமண மண்டபத்தில் வைத்து இந்த குழுவில் இருக்கக்கூடிய பெண்களுக்கு 26 பொருட்கள் அடங்கிய உணவு பொருட்கள் மூட்டை வழங்கப்பட்டது .இதில் கிட்டத்தட்ட 360 நபர்களுக்கு வழங்கப்பட்டு இதில் இன்றைய தினம் வணக்கம் திட்டத்தின் மூலம் 72 பேருக்கும் மேன்கோ ஹாலிஸ் திட்டத்தின் மூலம் 70 பேருக்கும் மொத்தமாக 140 பேருக்கு இந்த இலவச உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகள் வழங்கப்பட்டது ..
இதுபோல இந்த கோல் பின் திட்டத்தின் மூலம் ஆடு மாடுகள் வளர்ப்பதற்கான லோன் வழங்கப்பட உள்ளது இதுபோல மேன்கோஹேலீஸ் திட்டத்தின் மூலம் 25 பேருக்கு பயிற்சி கொடுத்து லோன் வழங்கப்பட உள்ளது .இந்த உதகை சமூக சேகர் சேவா சங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு அவர்களுக்கு கோல் பின் திட்டத்தின் கீழ் சிறு தொழில் வீடு கட்டுதல் .மேல்படிப்பு செலவு. தனிநபர் கழிப்பறை குழுவில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்த்த பல்வேறு பயிற்சிகள் சுய தொழில்கள் வழங்கி வருவதோடு அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றது. இந்த நிலையை கண்ட சில குழுக்கள் இந்த குழுவோடு இணைந்து செயல்படுவதோடு பயிற்சிகள் மேற்கொண்டு லோன்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்..
No comments:
Post a Comment