ஓணம் பண்டிகை விடுமுறையை ஒட்டி உதகையில் குவிந்த வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பூங்காவை கண்டு ரசித்து ஓணம் பண்டிகை விடுமுறையை உதகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும் இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையை ஒட்டி கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதால் உதகையில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதேபோல் உதகையில் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஓணம் பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையை ஒட்டி கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தே காணப்பட்டது.
இதில் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிநாட்டு வண்ணமலர்களை கண்டு ரசித்தும் செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
அதேபோல் பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளி மைதானங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டும், ஓய்வு எடுத்தும், குழந்தைகள் விளையாடியும் ஓணம் பண்டிகை விடுமுறையை உதகையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment