உதகையில் மிகப் பழமையான புனித ஸ்டீபன் ஆலயத்தில் அருட்பொழிவு ஆராதனை நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்துவ வழிபாட்டிற்காக முதலில் 1831 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான புனித ஸ்டீபன் ஆலயத்தில் கடந்த தென்னிந்திய திருச்சபை கோயம்புத்தூர் திருமண்டலம் சார்பாக அருட்பொழிவு ஆராதனை காலை 10:30 மணியளவில் துவங்கப்பட்டது இந்த அருட்பொழிவில் ஏழு பேருக்கு கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் அவரின் கரங்களால் அருட்பொழிவு வழங்கப்பட்டது. அருட்பொழிவின் போது மூத்த குருக்கள் ஒவ்வொருவரும் அருட்பொழிவு பெற இருப்பவர் தலைமையில் தம் கரங்களை வைத்து ஜெபித்து ஆசீர்வதித்தனார் இந்த அருட்பொழிவில் பேராயர் அம்மா திருமண்டல அலுவலர்கள் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட குருக்கள் நண்பர்கள் மற்றும் சபை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment