சுற்றுலாத்தலமான உதகையில் போக்குவரத்து நெரிசல் உதகை சேரிங்கிராஸ் முதல் மத்திய பேருந்து நிலையம் வரை நாள்தோறும் சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதனிடையே எட்டின்ஸ சாலையில் இரண்டு பக்கமும் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் மாணவ மாணவிகளுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் மற்றும் தற்பொழுது அங்கு உதகை நகராட்சி மூலம் பல லட்சம் செலவழித்து நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நடைபாதையை மக்கள் பயன்படுத்த இயலாமல் உள்ளது.
குப்பையும் மற்றும் தேவையற்ற இரும்பு பொருட்களும் (scraps) வாகனங்களும் அனைத்தும் நடைபாதை மீது நிறுத்திவிட்டு சென்று விடுவதால் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்கே மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் .எனவே அவர்கள் சாலை நடுவே நடப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது . மற்றும் நடைபாதையில் திறந்தவெளி கழிப்பறையாக மாறி வருவதால் அங்கு துர்நாற்றமும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால்,இதனை உடனே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக குரல் செய்தி மற்றும் பொதுமக்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.



No comments:
Post a Comment