தமிழ்நாடு முழுவதிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2.735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா இந்த விழாவினை திரு .உதயநிதிஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழ்நாட்டின் தமிழ் வளர்த்த மதுரையில் இன்று செப்டம்பர் 9 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தொடங்கி வைத்தார் இதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு
மையத்தில் மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ .ஆ. ப .அவர்கள் தலைமையில் தொடங்கியது. இதில் மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஊராட்சி தலைவர் திரு.மாயன் என்கிற மாதன் உதகை நகராட்சி தலைவர் திருமதி. வாணீஸ்வரி கோத்தகிரி ஊராட்சி தலைவர் திரு. ராம்குமார் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு துறையை சார்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டு இந்த நல திட்ட உதவிகளை வழங்கும் விழாவினை வெகுசிறப்பாக சிறப்பித்தார்கள்.
இதில் பல மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த மகளிர்கள் திரளாக கலந்துக்கொண்டார்கள் இதில் குன்னூரில்உள்ள வெண்தாமரை மகளிர் சுய உதவிக் குழுவின் செயளாலர் அனிதா பொருளாளர் ஷியாமளா மற்றும் பசுமை மகளிர் சுய உதவிக் குழுவின் செயளாலர் இந்திரா பொருளாளர் மஞ்சுளா மற்றும் குழுக்களின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு தமிழக அரசு கொடுத்த நலதிட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு அமைச்சர் மற்றும் ஆட்சியர் அவர்களுக்கு நன்றி கூறி சென்றார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment