நீலகிரி மாவட்டம் உதகை மெயின் பஜார் பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கும் பறவைகளை உண்டிவில் வைத்து அடித்து கொன்று தூக்கிச் செல்லும் இந்த கும்பல் மீண்டும் அப்பகுதியில் ஊடுருவி உள்ளது இவர்களால் பறவைகளுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில கட்டிடத்தில் அமைந்திருக்கும் கண்ணாடிகளும் உடைந்து விடுகின்றது இதனால் அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள் . இந்த காட்சிகள் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவியில் பதிவாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சம்பந்தப்பட்ட துறை இந்த நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment