நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையுடன் கூடுதலாக ரூபாய் 10 பெற்றுக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூபாய் 10 திரும்ப வழங்கப்படும். நீலகிரியில் முதல் முதலில் ஆரம்பித்த இந்த திட்டம் மலை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் மலை மாவட்டம் சுற்றுலா தலங்களில் காலி பாட்டில்கள் சாலையோரங்களில் வீசி வனவிலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்தது.
இந்த திட்டத்தை பாராட்டிய கோர்ட் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவு படுத்திட அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நீலகிரியில் அரசு நிர்ணயித்த விலையை தாண்டி ரூபாய் 10, 20 என கூடுதல் விலைவைத்து விற்பதாக குடிமகன்கள் குற்றம்சாட்டிவந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 12 ஆயிரம் பில்லிங் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். பார்கோடு ஸ்கேன் செய்து அரசு நிர்ணயித்த சரியான விலைக்கு பில் வழங்கி விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment