நீலகிரி மாவட்டம் வனம் சூழ்ந்த பகுதியாகும் முன்பெல்லாம் வன விலங்குகள் ஊருக்குள் வருவதில்லை. வன விலங்குகளின் உணவு தேவை வனத்திற்குள்ளேயே கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலாவருகின்றன. இரவில் மட்டுமே வந்துகொண்டிருந்த சிறுத்தை செப்டம்பர் 11 புதன் கிழமை பகல் நேரத்தில் ரகோத்தகிரி பேரகனி அருகில் உள்ள கன்னேரி ஊரில் கப்பட்டி செல்லும் சாலையில் நாயை வேட்டையாடியது அங்கு இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை மிகவும் அச்சப்பட வைத்துள்ளது. வனத்துறை போர்க்கால நடவடிக்கை எடுத்து சிறுத்தைகளை வனங்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment