கூடலூர் வட்டம் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளியில் கிளைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மூத்த பழங்குடி பெண் கரிக்கி தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக M.S.தேவதாஸ் துணைத்தலைவர்கள்கரியன், ருக்குமணி செயலாளர் லலிதா துணைச்செயலாளர்கள் சுசீலா பொருளாளர் கெளசல்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
பழங்குடிகளின் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதி, இலவச எரிவாயு,அரசு தொகுப்பு வீடு இம்மாத இறுதிக்குள் வன கிராமசபை அமைத்தல், மண்ணெண்ணை 3 லிட்டராக வழங்க வேண்டும்.
மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடி சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் K. மகேந்திரன், தமிழ்நாடு பழங்குடி சங்க மூத்த தலைவர் தோழர் V.P. குணசேகரன் வழக்கறிஞர் செவ்விளம்பரிதி 50க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் செயலாளர் லலிதா நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment