அமெரிக்கா சென்ற யானைகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் தயாரிக்கும் யானை பொம்மைகள் கண்காட்சிக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளது இதனால் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை கூடலூர் பகுதிகளில் வனத்திற்கு உள்ளேயும் சாலை ஓரங்களிலும் காணப்படும் எதற்கும் பயப்படாத லண்டான எனப்படும் உன்னி செடி குச்சிகளை பயன்படுத்தி யானைகள் உருவங்களை உருவாக்க தொரப்பள்ளி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் பயிற்சியை அளித்து வருகின்றனர் இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதோடு காடுகளில் உள்ள உன்னி செடிகளை அகற்றும் வகையில் கலை நயத்துடன் யானைகள் மற்றும் இதர உருவங்களையும் உருவாக்கி வருகின்றனர். சுமார் 200 பழங்குடி கை வித்தையர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தயாரித்த யானை பொம்மைகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டு கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்திற்கு கூடலூர் பகுதியில் இருந்து யானை பொம்மைகள் அனுப்பப்பட்டுள்ளது அமெரிக்காவில் யானை பொம்மைகள் லாரியில் எடுத்து செல்லப்படும் வீடியோ காட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு இந்திய யானைகள் இறுதியாக நியூயார்க் நகரத்தை வந்தடைந்தது பெரிய யானைகளின் இடம் பெயர்வு 100 பிரமிக்க வைக்கும் யானை சிற்பங்களை கொன்ற யானை கூட்டம் நியூயார்க் நகருக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment