திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி சார்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழலில் சிறப்பாக பணி புரியும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு, ஹோப் ஆப் கார்டன் அறக்கட்டளை, குன்னூர் தூய்மை சங்கம், ஆகிய அமைப்புகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். .
லாங்வுட் சோலை சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழக அரசின் பசுமை ஆர்வலர் விருது பெற்ற கே .ஜே . ராஜு அவர்கள் விருதினை பெற்றுக் கொண்டார். 27 ஆண்டுகளாக லாங் வுட் சோலையின் பாதுகாப்பு மற்றும் காட்டினை அந்நிய களைச் செடிகளில் இருந்து காப்பாற்றும் முயற்சியையும் மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் ராஜு அவர்கள் இந்த விருதினை பெற்றுக்கொண்டு நன்றி கூறும் போது கூறிய கருத்துக்கள்.....
எங்கள் கமிட்டியின் சார்பாக லாங்வுட் சோலையில் அனைத்து தாவர இனங்களையும், விலங்கினங்களையும் கண்டறிந்து ஆவணப்படுத்தியது. ஏராளமான இயற்கை முகாம்கள் நடத்தி பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உருவாக்கியுள்ளது. நீல பூஞ்சை என்ற அபூர்வமான தாவர இனத்தை கண்டறிந்து ஆவணப்படுத்தியது. போன்ற பல சாதனைகளை பாராட்டுறையில் குறிப்பிட்டார் . ஹோப் ஆப் கார்டன் அறக்கட்டளையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தாம்பட்டி லட்சுமி நாராயணன் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் திமுக சுற்றுச்சூழல் அணி ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் தொண்டு நிறுவனத்தின் கள அலுவலர் செண்பகநாதன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment