தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் தமிழக அரசு வனத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட உள்ளது. இதனையொட்டி நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கோத்தகிரி நாக்கு பெட்டா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. மோகன் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். கோத்தகிரி வட்டார 19 ஊர்களின் தலைவர் திரு. ராமா கவுடர் அவர்கள் மேட்டுப்பாளையம் பவானி நதிநீர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் திரு . மணி ஆகியோர்முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே .ஜே. ராஜு அவர்கள் திட்டத்தின் நோக்கத்தை குறித்து விரிவாக பேசினார். கம்பட்டி ஊர் தலைவர் திரு. ஹாலாகவுடர், ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ஆண்டி கவுடர், மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியின் சமுதாய கல்லூரி முதல்வர் திரு. லெனின், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலர் ஆசிரியர் திரு. போஜன், நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் திரு. ராமதாஸ், ஹெரிடேஜ் பவுண்டேஷன் சங்கத்தின் செயலர் திரு. கண்ணன் ராமையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த கலந்துரையாடலின் போது மனிதர் விலங்கு மோதல் பிரச்சனை, அந்நிய நாட்டு தாவர இனங்களை அகற்றுதல், சரியான இடத்தில் மரக்கன்றுகளை நடுதல், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மரங்களை பற்றிய தகவல்களை சாட்டிலைட் மூலம் அறிந்து தேவையற்ற மரங்களை நீக்கி அங்கு இந்த மண்ணுக்குரிய மரங்களை நட வேண்டும், புதிதாக மரங்களை நடுவதுடன் ஏற்கனவே காலங்காலமாக உள்ள மரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக கேர்பெட்டா திரு கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment