போக்குவரத்து துணை ஆய்வாளர் அருண்குமார் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு வழங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 26 September 2024

போக்குவரத்து துணை ஆய்வாளர் அருண்குமார் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு வழங்கினார்


 நேற்று காலை 10 மணிக்கு ஜெ.எஸ்.எஸ் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் துணை ஆய்வாளர்கள் சுரேஷ் ,கனகராஜ் முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்வில்  போக்குவரத்து துணை ஆய்வாளர் அருண்குமார் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலன்  செயலி குறித்து விழிப்புணர்வு வழங்கினார்



தமிழ்நாடு காவல்துறையால் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த 'காவலன் SOS' செயலி குறித்து பொதுமக்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்


எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ இந்த செயலி தயாராக உள்ளதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.


வெளியே சென்று வீடு திரும்பும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பாக உணர 'காவலன் SOS' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாட்டில் இந்த நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. அவசர காலத்திலோ, பாதுகாப்பற்ற சூழலிலோ இந்த காவலன் SOS செயலி பொதுமக்களுக்கு உற்ற தோழனாக தோள் கொடுக்கிறது.


மேலும், செயலியில் உள்ள SOS பட்டனை தட்டினால், மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் கேமரா தானாக திறந்து, இருப்பிட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.


காவலன் Dial 100 என்றால் என்ன?

'KAVALAN Dial 100' என்ற அவசர உதவி எண் காவலன் எஸ்ஒஎஸ் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இருந்தால், அவசர காலத்தில் 100 என்ற எண்ணிற்கு அழைக்க தேவையில்லை. செயலியில் உள்ள SOS பட்டனை மட்டும் தட்டினால் போதும். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தொடர்ந்து '100' என்ற அவசர உதவி எண்ணை அழைத்து ஆபத்து காலத்தில் உதவியைப் பெறலாம். என கூறினார்


இந்த விழிப்புணவர்வு தங்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக அமைந்திருந்தாக மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad