நீலகிரி மாவட்டம் உதகையில் தாறுமாறாக நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் நடக்க கூட முடியவில்லை. அதனை ஆய்வு செய்து சிறப்பு ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம் சாலையோரங்களின் நடைபாதை பகுதியில் பேரிகார்டு அமைத்து நடைபாதை பகுதியில் அலங்காரம் பூந்தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் சுற்றுலா தலமான நீலகிரியில் டவுன் பகுதியிலும் அனுபவத்தை பெறும் வகையில் மாற்றம் செய்தனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நடைபாதை பகுதியில் நேரடியாக பார்வையிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவியா தண்ணீரு இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப., ஆகியோருடன் சென்ற அரசுத்துறை அதிகாரிகள் குழு சில அறிவுரைகளையும் வழங்கினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment