நீலகிரி மாவட்டம் வனம் சார்ந்த மாவட்டமாகும் வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கிவந்த நீலகிரியில் சமீப காலமாக வனங்களை விட்டு குடியிருப்புகளில் தஞ்சமடைந்த குரங்குகளால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.
வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பார்கள். அந்த குரங்குகள் கூட்டம் சில தினங்களில் மீண்டும் ஊருக்குள் வந்துவிடுகின்றன.
வனத்துறை கூண்டுவைத்துபிடிப்பது தொடர்கதையான நிலையில் தற்போது வனத்துறையினர் வைக்கும் கூண்டுகளில் குரங்குகள் சிக்குவதில்லை. பொதுமக்கள் கூறுகையில் குரங்குகளை ஐந்தறிவு ஜீவன் என்கிறோம் ஆனால் மின்கம்பத்தில் ஏறும் குரங்குகள் மின்சாரம் வரும் ஒயர் எது வராத ஒயர் எது என்று பகுத்தறிந்து விலகுகின்றன. ஏற்கனவே கூண்டில் சிக்கும் குரங்கு கூண்டை பற்றி அறிந்துள்ளதால் பெரிய குரங்கு ஒன்று குட்டிகள் கூண்டில் சிக்காமல் பாதுகாப்பாக அழைத்துச்சென்று விடுகிறது. வனத்துறை கூண்டு வைத்து ஒரு ஊழியரை கண்காணிப்பு பணியில் அமர்த்தி திண்பண்டம் வாகன செலவு செய்து குரங்குக்காக காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர். வனத்துறையினர் மாற்றி யோசித்து அல்லது வெளிநாடு சென்று டெக்னிக் கேட்டறிந்து மாற்று ஏற்பாடு செய்தால் தான் குரங்குகளை பிடிக்க முடியும். தற்போது குரங்குகள் கையில் தான் வனத்துறை சிக்கியுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment