நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. பா.மு. முபாரக், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். குன்னூர் பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். உறுப்பினர்கள் தங்கள் நிறை குறைகளை கூறினார்கள். முப்பெரும் விழா மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment