250 வகையான குறிஞ்சி மலர் செடிகள் உள்ள நிலையில் நீலகியில் வெள்ளை குறிஞ்சி, நீலக்குறிஞ்சி, மற்றும் கருங்குறிச்சி என மூன்று வகையான குறிஞ்சி மலர்கள் காணப்படும் நிலையில் நீலகிரியில் நீல வண்ணத்தில் குறிஞ்சி பூக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றது
கடிகாரம் தவறாமல் நகர்வது போலவே, ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நீல நிறத்தின் துடிப்பான நிழலைப் பெறுகின்றன. ஒரு மந்திரவாதியைப் போல, நீலகிரியின் புல்வெளி மலைகள், பசுமையின் முடிவில்லாத கடலில் இருந்து தன்னை குறிஞ்சி தோட்டங்களின் நீல தடாகமாக மாற்றும். இந்த உண்மையான ஆனால் நம்புவதற்கரிய நிகழ்வு ஒரு தனித்துவமான மற்றும் அரிய அனுபவமாகும்
மலைக்காற்றில் நடனமாடும் புதர்களில் இருந்து ஊதா மற்றும் நீல நிற பூக்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. மேலும் நீல நிற வெடிப்பு போல், முழு மலைத்தொடர்களும் அழகிய குறிஞ்சி மலர்களால் நீல நிற போர்வையை தங்கள் மேல் அணிந்து கொள்கின்றன.
முடிவில்லாத தீவிர அழகியல் மற்றும் நித்திய அன்பின் அடையாளமாக கருதப்படும் குறிஞ்சி மலர்கள், புதுத் திருமண தம்பதிகள் மற்றும் நம்பிக்கை தளராத காதலர்களின் கூட்டத்தை ஈர்க்கிறது.
முத்துவாஸ் மற்றும் தோடாஸ் ஆகிய உள்ளூர் பழங்குடியினரின் தொன்மங்கள் மற்றும் கலாச்சாரத்தில் இந்த மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. முருகப்பெருமானின் மலர் என பழங்குடியின மக்கள் நம்பிகின்றனர்
கடல் மட்டத்தில் இருந்த 1600 மீட்டர் முதல் 2400 மீட்டர் உயரம் கொண்ட குளிர்ந்த வெப்பநிலை உள்ள பகுதிகளில் மட்டுமே குறிஞ்சி மலர்கள் வளரக்கூடிய தன்மை கொண்டது.
குறிஞ்சி மலர்கள் குறிப்பிட்ட நாள் மட்டும் பூத்துக் குலுங்கும் நிலையில் அதன் விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்ந்து மலர 12 ஆண்டுகள் ஆகும் எனவும் மக்கள் கூறுகின்றனர். குறிஞ்சி மலர்களை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற வகை நீலநிற குறிஞ்சி மலர்கள், ஊட்டி அருகே கெங்கமுடி பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின மந்தான பிக்கபத்திமந்து கிராமத்தை ஒட்டியுள்ள மலைச்சரிவில் பூத்து குலுங்குகின்றன. 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்த மலைப்பகுதியில் பூத்துள்ள இந்த மலர்களை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
மலைகள் முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அந்த மலையை நீண்ட தூரத்திலிருந்து பார்க்கும் போது நீல நிறத்திலான போர்வையை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலநிற குறிஞ்சி மலரை பார்க்க அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள மலைப்பகுதி வனப்பகுதி என்பதனால் அங்கு யாரும் செல்ல வேண்டாம். குறிஞ்சி மலர்களை சேதப்படுத்த கூடாது. வனத்திற்குள் நுழைந்து அவற்றை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment