நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டனில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா சக்தி கணபதி திருக்கோயிலில் செப்டம்பர் 7 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஶ்ரீ மஹாசக்தி கணபதி திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஶ்ரீ மஹா சக்தி விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேளாதாளங்கள் இசைக்க நடனமாடி உற்சாகத்துடன் சென்றனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை கோத்தகிரி காவல்துறையினர் மற்றும் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்
![]() |
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment