கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் சுகுமார், குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர்
நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரேணுகா, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தண்டபாணி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், துணை வட்டாட்சியர் விஜயன், நாவா கள பணியாளர் விஜயா, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஸாத், .இந்திரஜித், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், நேரு யுவகேந்திரா மன்ற உறுப்பினர் இன்பநாதன், மகளிர் குழுவினர் சத்தியா விக்னேஷ்வரி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கூட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தடுக்க வேண்டும், குழந்தைகள் இடையே ஏற்படும் பிரச்சினைகளை 1098 க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் குழந்தைகளை தனியாக இருப்பதை தவிர்க்க அனைவரும் கல்வி கற்க அனுப்ப வேண்டும். தொடர் கல்வி வழங்க வேண்டும், போதை பொருட்கள் தடுக்க கண்காணிப்பு அவசியம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் வருவதை தொடர்ந்து அரசு தனி ஆப் மூலம் கண்காணிக்க படுகிறது மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் தனி குறுஞ்செய்தி வருகிறது இதனை பெற்றோர் கண்காணிக்க வேண்டிய அவசியம். குறிப்பாக பழங்குடியின குழந்தைகள் அதிகம் பாதிக்கின்றனர்.
பேருந்துகளில் புதிய இட வசதி இல்லாததால் நெருக்கமாக போவதால் தவறுகள் ஏற்படுகிறது எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு செல்வதை கண்காணிக்க வேண்டிய அவசியம் குடியிருப்பு பகுதிகளில் தவறுகள் நடப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதிக அளவு கவுன்சிலிங் வழங்குவது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடமும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அதிகம் தகவல் பகிர் விழிப்புணர்வு ஏற்படுத்த குழுவினர் முடிவெடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பேசப்பட்டது.
கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தினேஷ், சிந்துஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment