நீலகிரி மாவட்ட திமுக சார்பில் - கழக முப்பெரும் விழா கொண்டாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் - கழக முப்பெரும் விழா கொண்டாட்டம்.



கழக முப்பெரும் விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் உட்பட 500க்கும் மேற்பட்ட இடங்களில் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை,  உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் சசிகுமார்,  ராஜா, காந்தள் ரவி, ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக கழக நிர்வாகிகள் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில், உதகை நகர அவை தலைவர் ஜெயகோபி, துணை செயலாளர்கள் ரீட்டா, கிருஷ்ணன், நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், தம்பி இஸ்மாயில்,  மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், தியாகு, மார்க்கெட் ரவி, பெரியசாமி, ரகுபதி, சசிகுமார், ராஜ்குமார், மஞ்சுநாத், சிவகுமார், பிரேமா, உதகை நகரமன்ற உறுப்பினர்கள் மேரி புளோரீனா, வனிதா, உதகை வடக்கு ஒன்றிய அவை தலைவர் குண்டன், ராமன், ஜோகி, பரமேஸ்வரி உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad