நீலகிரி மாவட்டம் உதகை ஷான் காட்டேஜ் ல் செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை அன்று தமிழக குரல் நீலகிரி மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக குரல் இணை- ஆசிரியர் திரு. மகேந்திரன் அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தாஸ் அவர்கள், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. கார்முகில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் திரு. வினோத் அவர்கள், சிறப்பு செய்தியாளர் திரு. தீனதயாளன் அவர்கள், உதகை செய்தியாளர் திரு. சீனிவாசன் அவர்கள், கோத்தகிரி செய்தியாளர் திரு. விஷ்னுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
செய்திகள் மற்றும் பார்வைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.இணை-ஆசிரியர், மாநில ஒருங்கிணைப்பாளர், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்தியாளர்களுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார்கள். டிசம்பரில் நடைபெறும் விருது விழா நீலகிரியின் பங்களிப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது.தமிழக குரல் செய்திநிறுவனம் வழங்கிய விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் ஆசிரியர் திரு. வினோத் குமார் ஆதிமூலம் அவர்கள் காணொலி காட்சி மூலமாக பங்குபெற்று. செய்தியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். செய்தியாளர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
திரு. ஷான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்த சிறப்பாக இடம் கொடுத்து உதவிய திரு. ஷான் அவர்களுக்கு அனைத்து செய்தியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment