உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 September 2024

உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு


அரசு கலை கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. கல்லூரி முதல்வர் ராமலட்சுமி கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஏற்கனவே TNGASA இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு வரும் 12ம் தேதியன்று காலை 9.30 மணி முதல் இறுதிகட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இணையத்தில் விண்ணப்பித்து சேர்க்கை நடைபெறாத மாணவ, மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.  கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் TNGASA மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப நகல், 10,11,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், இளநிலை பட்ட சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல்பக்கம், குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 6 நகல்கள், 6   புகைப்படம் கொண்டு வர வேண்டும். சேர்க்கை கட்டணம் தோராயமாக ரூ.5000 கொண்டு வர வேண்டும். இவ்வாறு முதல்வர் ராமலட்சுமி தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad