பந்தலூரில் அமைந்துள்ள முஸ்லிமின் மதரசாவில் வைத்து விம்ஸ் மேற்படி மருத்துவமனையில் மூலமாக பந்தலூர் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சையில் 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடியான சிகிச்சை வழங்கப்பட உள்ள அட்டையின் பதிவு செய்து இன்றைய தினம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்படி விம்ஸ் மருத்துவமனை பல்வேறு மருத்துவ முகாம்களை பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் நடத்தி வருகின்றனர் அது மட்டுமல்லாது தமிழ்நாடு அரசு மூலம் வழங்கக்கூடிய மருத்துவ காப்பீடு திட்டம் இந்த மருத்துவமனையில் பயனில் செயல்பட்டு வருகிறது.
இதனால் கூடலூர் பந்தலூர் பகுதியில் இருக்கக்கூடிய ஏழை எளிய நடுத்தர மக்கள் இங்கு சென்று தங்களுக்கு தேவையான சிகிழ்ச்சிகளை இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெற்று வருகின்றனர் .அது மட்டும் அல்லாது கடந்த கொரோனா காலகட்டத்தில் இங்கு சென்று தங்களுக்கு தேவையான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து தங்களுடைய மருத்துவ முகாமினை நடத்தி வந்த நிலையில் இன்றைய தினம் பந்தலூர் மதரசாவில் வைத்து நடைபெற்ற மருத்துவ அட்டையை வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு விம்ஸ் மருத்துவமனையின் மனநலமருத்துவர் ரெத்திக் டாக்டர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் விம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் சூபிகல்லங்கோடன். தமிழ்நாடு மருத்துவ முகாம் பொறுப்பாளர் சஜித் முன்னாள்கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி. பந்தலூர் முஸ்லீம்மீன் மதரசாவின் அப்துல்சலாம் சக்காபி.பிகேம்.முஹம்மது.சாமாதின் செயலாளர் உமர்.எஸ்ஒய்எஸ் செயலாளர் உமர். முஸ்லீம் பெண்கள்.கலந்துக் கொண்டனர்...
மேப்பாடி விம்ஸ் மருத்துவமனையில் மூலம் வழங்கக்கூடிய சிறப்பு தள்ளுபடி மருத்துவ.(பிரவிலேஜ் )அட்டையானது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் எடுத்துக் கொண்டால் 10 முதல் 30% தள்ளுபடி இந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவ மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதில் 200 பேர்க்கு இது போன்ற ஒரு இலவச சிறப்பு தள்ளுபடி மருத்துவமனது இந்த அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக சொல்லப் போனால் இந்த மருத்துவ அட்டை மூலம் பொது மருத்துவம் லேப் பார்மசி மருத்துவம் பரிசோதனை இது போன்ற மருத்துவத்தில் சிகிச்சை பார்க்கும் போது தங்கி சிகிச்சை பெறுவது மூலம் 20% தள்ளுபடி உடன் இந்த மருத்துவமானது பார்க்கப்படுகின்றது .இதில் அனைத்து நபர்களும் இந்த (பிரவிலேஜ் கார்டு) மருத்துவ கார்டின் மூலம் பயன்பெறலாம் என விம்ஸ் மருத்துவமனை மேலாளர் தெரிவித்துள்ளார்..
இந்த கார்டை விம்ஸ் பொது மேலாளர் வழங்க கூடலூர் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி பேற்றுக்கொண்டார்...
No comments:
Post a Comment