கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபில் டிரஸ்ட், பந்தலூர் கிளை நூலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பந்தலூர் கிளை நூலகர் நித்தியகல்யாணி தலைமை தாங்கினார். நூலக வாசகர் வட்ட தலைவர் முத்துகுமார், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஸாத், சமூக ஆர்வலர் இந்திரஜித், ஷாலோம் சரிட்டபில் டிரஸ்ட் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதகை அரசு மருத்துவ குழுவினர் அந்தோணியம்மாள் தலைமை கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொண்டனர்.
150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இதில் 20 பேர் கண் குறைய அறுவை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன முறையிலான லேசர் முறையில் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்து தரப்பட உள்ளது.
முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் மகேந்திர பூபதி, கோகுல்,
முகாமிற்கான ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment