பந்தலூர் தாலுக்காவில் நடைபெற உள்ள விநாயகர் சதூர்த்தி ஊர்வல நிகழ்ச்சியை முன்னிட்டு பந்தலூர் கூடலூர் பகுதிக்குட்பட்ட காவலர்களின் அணி வகுப்பு மக்கள் மத்தியில் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது...
கூடலூர் பந்தலூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாடப்பட உள்ள நிலையில். இதனையோட்டி விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட உள்ளது. மேலும் இந்த விழாவிள் எந்த அசம்பாவிதங்களும் நடை பெறாமல் இருப்பதற்கும் மக்களுக்கு பாது காப்பு வழங்கிட நாங்கள் இருக்கிறோம் என நிரூபிக்கும் வண்ணமாக காவல்துறையின் மூலம் இன்றைய தினம் பந்தலூர் கூடலூர் பகுதியில் காவலர்களின் அணி வகுப்பு மக்கள் மத்தியில் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதனை காண சாலை இருபுரமும் நின்று மக்கள் கண்டு களித்தனர் ..
இந்த அணிவகுப்பின் போது தேவாலா காவல் துறை துனை கண்காணிப்பாளர் சரவணன்.ஆய்வாளர் சங்கரேஸ்வரன் .தேவாலா மகளீர் காவல் ஆய்வாலர் செல்வகுமாரி. சேரம்பாடி காவல்நிலைய ஆய்வாளர் துரைபாண்டி மற்றும் உதவி ஆய்வாலரகள் காவலர்கள் மிடுக்கான அணிவகுப்பில் கலந்துக்கொண்டனர்..
No comments:
Post a Comment