ஊட்டி ராஜ்பவன் அருகே பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ் துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதால் அரசு ஊழியர்கள் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். உதகை ராஜ்பவன் அருகே பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள குடியிருப்பில் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், 35 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். காவல்துறைக்கு சொந்தமான குடியிருப்பில் பத்து குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் பழமையான இந்த குடியிருப்புகளை போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் பராமரிக்காமல் விட்டதால் குடியிருப்புகள் அவல நிலையில் உள்ளன.
அங்குள்ள பழமை வாய்ந்த 45 குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராஜ்பவன் சோலைக்கு வனவிலங்கு தொல்லைக்கு இடையே சென்று ஊற்று நீரை எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர் குடியிருப்புகளை புதர் சூழ்ந்ததால் விஷ ஜந்துக்கள் தொல்லை அதிகரித்துள்ளது சிறுத்தை கரடி காட்டெருமை தொள்ளையால் இரவு பணிக்கு சென்று திரும்ப போலீசார் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வெளியே வரும் மக்கள் பீதியுடன் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி சுகாதாரத்திற்கு இடையே ஏற்பட்டுள்ளது நடைபாதைகள் அங்கங்கே உடைந்துள்ளன ஓட்டு வீட்டின் மேற்கூரை ஆங்காங்கே உடைந்திருப்பதால் மலை சமயத்தில் ஒளிந்து வருகிறது வனவிலங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் வீட்டில் வெளியேற வர முடியாமல் அச்சத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலேயே குடியிருந்து வருகிறோம். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment