கணக்கில் வராத ரூ.3.25 லட்சம்; சேரங்கோடூ ஊராட்சி அலுவலகத்தில் பறிமுதல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 September 2024

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம்; சேரங்கோடூ ஊராட்சி அலுவலகத்தில் பறிமுதல்


நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்., கட்சியை சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் பல பணிகளுக்கும், கமிஷன் பெற்று, தகுதியில்லாத பயனாளிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்வதாக புகார் எழுந்தது.இந்நிலையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் , ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்


அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத, 3.25 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஊராட்சி செயலர் சஜீத், தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad