28 வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

28 வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா



28 வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி .விழா. விநாயகர் கோவிலை சுற்றி வளர்ப்பு யானை கிருஷ்ணா, மணி அடித்தும், தும்பிக்கையை தூக்கியும், மண்டியிட்டும் விநாயக கடவுளை அர்ச்சனை செய்து வணங்கி அசத்தல்.   கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் விநாயகர் சதுர்த்தி என்பதால் யானைகளுக்கு பிடித்த உணவுகள் வழங்கப்பட்டது,


நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகமாக இயங்கி வருகிறது, அங்குள்ள  தெப்பக்காடு யானைகள் முகாம், அது அருகாமையில் உள்ள அபயாரணயம் யானைகள் முகாம் என இரண்டு முகாம்களில் , 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு உள்ள யானைகள் தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா  மாநிலங்களிலும் மக்களை அச்சுறுத்தி வரும் காற்று  காட்டு யானைகளை பிடிப்பதற்கும் அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் பயிற்சி கொடுத்து முதுமலை இல் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது,



இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை முதுமலை யானைகள் முகாமில் உள்ள யானைகள்  காப்பகத்திலும் அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக அங்குள்ள மாயாற்றில் அனைத்து யானைகளும் குளிக்க வைக்கப்பட்டு சந்தனம், குங்குமம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு. பின்பு தெப்பக்காடு யானைகள் முகாமில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பாக வரிசையாக நிற்கவைக்கப்பட்டன.


இதனை அடுத்து அந்த கோவிலின் பூசாரியான பொம்மன், விநாயகருக்கு பூஜை செய்த நிலையில் அந்த கோவிலை சுற்றி வந்த கிருஷ்ணா யானை மணி அடித்தவாறு சுற்றி வந்தது,, 


பின்பு தும்பிக்கை தூக்கியும் மாண்டியிட்டும் அங்கு இருந்த யானைகள் பிழறிய வாறு விநாயகப் பெருமானை வணங்கின. இந்த காட்சியை அங்கு கூடி இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்,


 பின்பு யானைகளுக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த ஊட்டச்சத்து உணவான கேழ்வரகு, ராகி, அரிசி,  மற்றும் யானைகளுக்கு பிடித்த உணவான வெல்லம், கரும்பு, தாது உப்பு, தேங்காய்,  உட்பட பல்வேறு வகையான பழங்கள் யானைகளுக்கு வழங்கப்பட்டன.


இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலை, பொங்கல் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக ஐந்து கரத்தான் யானைமுகம் கொண்ட விநாயகர் பெருமானுக்கு யானைகள் பூஜை செய்து வழிபட்டது அங்கு வந்து இருந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. .

No comments:

Post a Comment

Post Top Ad