டென்மார்க் நாட்டில் நடைபெற்ற உலக தீயணைப்போர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழ்நாடு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர் திரு மாரியப்பன் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இவர் வட மண்டலத்திற்குட்பட்ட வட சென்னை மாவட்ட தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நமது தமிழ்நாடு தீயணைப்புத் துறைக்கு பெருமை சேர்த்த இவருக்கு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்கா கேத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment