பசுமை முதன்மையாளர் விருது பெற்ற ஆசிரியர் திரு. K. J. ராஜூ அவர்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

பசுமை முதன்மையாளர் விருது பெற்ற ஆசிரியர் திரு. K. J. ராஜூ அவர்கள்




தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒருவர் என கிரீன் சாம்பியன் அவார்ட் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விருது வழங்கி கௌரவிக்கிறது. 2003 - 2004 ஆம் ஆண்டுக்கான நீலகிரி மாவட்ட  சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது கோத்தகிரி லாங் வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



 ஆசிரியர் திரு. ராஜு அவர்கள் கடந்த 27  ஆண்டுகளுக்கு மேலாக லாங்வுட்  சோலையில் காடுகளை வளர்த்தல் மரம் நடுதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே  சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல சாதனைகளை செய்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  ஆசிரியர் திரு. ராஜு அவர்கள்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளராகவும் வானவில் மன்றத்தின் மாநில கருத்தாளராகவும் இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் பள்ளி மாணவர்களிடையே  கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 கோவை மாவட்டத்திற்கான இந்த விருது கோத்தகிரி அருகே உள்ள ஆவுக்கள்  எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது யோகநாதன்  அவர்கள் கோவையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் . கோவை பகுதியில் அவர் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தங்களது மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் யோகநாதனுடைய சாதனையை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகநாதன் அவர்கள் ஆசிரியர் திரு. கே .ஜே. ராஜு  அவர்களிடம் பயின்ற  முன்னாள் மாணவர் ஆவார். இந்த ஆண்டு ஒரு ஆசிரியர் மற்றும் அவருடைய மாணவருக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது பலரும் அவர்களை பாராட்டியுள்ளனர்.



லாங்குவேஜ் சோலை பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் திரு. சந்திரசேகர் மற்றும் திரு. வினோபாப் ஆகியோரும் திரு. கே .ஜே .ராஜு அவர்களோடு இணைந்து இந்த பசுமை விருதினை பெற்றுக் கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad