நீலகிரி மாவட்டம் குன்னூர் பந்துமையில் JCB வாகனத்திற்க்கு பதிலாக நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளிகளை வைத்து மலையை குடைந்து கட்டுமானப்பணியில் ஈடுபடும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாமானிய மக்கள் வீடு கட்ட அனுமதி இல்லாத நிலையில் தனியார் நிறுவனத்திற்க்கு மட்டும் பந்துமையில் மலையைகுடைந்து வீடுகட்ட அனுமதியளித்தது யார் எனவும் இந்த அத்துமீறல் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்க்கு பலமுறை கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் இல்லையேல் இந்த பகுதியில் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment