நீலகிரி மாவட்டத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஜனனம் தினம் கிருஷ்ணர் ஜெயந்திவிழா கோலாகலமாக ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அதிகாலைமுதல் மாவட்டத்தின் அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குழந்தை கிருஷ்ணர் வேடமிட்டு மழலையர் கோயில்களில் வலம் வருகின்றனர். நூற்றாண்டு கடந்த கோத்தகிரி கன்னேரிமுக்கு பிரசித்தி பெற்ற ஶ்ரீ சந்தான வேணுகோபால் சுவாமி கோயிலில் காலை 6 மணிக்கு சுதர்ஷன ஹோமம் நடைபெற்றது பகல் 1.30 மணிக்கு அபிஷேக பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு கிருஷ்ணர் ஜனனம் உற்சவம்(தொட்டில் உற்சவம்) நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment