நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை யொட்டி ஒவேலி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கருவிகள் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தி. ந. வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் சரியாக உள்ளதா என கேட்டு இருந்த ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் கூடலூர் எல்லமலை சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நெடுஞ்சாலை துறை சார்பில் சீர் செய்யப்பட்டு வருவதையும் ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழையளவை கணக்கிடும் மழை மானியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தாய்வின்போது ஓவியில் பேரூராட்சி செயலாளர். ஹரிதாஸ் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment