நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட்டில் உள்ள காய்கறிகள் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் எடை அளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதகை ஆணையர் அமலாக்கம் தே தாமரை மணாளன் தலைமையின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உதகை மார்க்கெட்டில் உள்ள காய்கறிகள் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு 134 காய்கறிகள் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரை இடாமல் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 32 இடை இயந்திரங்கள் மற்றும் தராசுகள் ஆகியவற்றினை பறிமுதல் செய்யப்பட்டுள்ள உடன் வியாபாரிகளை உரிய முத்திரை கட்டணத்தினை செலுத்தி முத்திரையீட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இதே போன்று சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் முத்திரை இடாமல் எடை இயந்திரங்கள் மற்றும் தராசுகளை வியாபாரத்திற்கு பயன்படுத்தும் வியாபாரிகள் மீது சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளருக்கு ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே தாமரை மணாளன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது உதகை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆர் சுபத்ரா குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம் கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பாக உதவி ஆய்வாளர் ஜி சுரேஷ் குமார் ஆர் கார்த்திக் உடனிருந்து கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment