குன்னூர் ஜெகதளா பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

குன்னூர் ஜெகதளா பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.  மும்தாஜ் அவர்கள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில கருத்தாளரும் வானவில் மன்றத்தின் மாநில கருத்தாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போது அவர் கூறிய கருத்துக்கள்..... 



 அண்மையில் நாம் சந்தித்த வயநாடு பேரிடர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கனமழை மற்றும் நிலச்சரிவு, கடந்த ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் வீசிய வெப்ப அலையின் காரணமாக சில ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் போன்ற பேரிடர்களுக்கு காரணம் பூமியினுடைய காலநிலை மாற்றமே ஆகும் இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் மனிதர்களின் பேராசையும் நுகர்வு கலாச்சார மோகமும் தான். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை சூறையாடப்படுகிறது உற்பத்தியின் பெயரால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன மின் சக்தி இல்லாமல் எந்த உற்பத்தியும் நடைபெறாது என்பது நமக்குத் தெரியும் வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஒரு நாளைக்கு 36 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது 96 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் நான்கு கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது இன்றைய நிலையில் உலகின் மக்கள் தொகை 800 கோடி இவர்களின் எடையைப் போல 200 மடங்கு கார்பன் டை ஆக்சைடை ஏற்கனவே வளிமண்டலத்தில் நிரப்பி உள்ளோம் ஒரு கார்பன் டை ஆக்சைடு 200 ஆண்டு காலம் வாழும் மற்றொரு பசுமை குடில் வாயுவான மீத்தேன் தண்ணீர் தேங்கியுள்ள வயல்வெளிகளில் இருந்தும் கால்நடைகளில் இருந்தும் வெளிப்படுகிறது.


 இது கார்பன் டை ஆக்சைடு போல 13 மடங்கு வலிமை உள்ளது இனி தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்சைடு தன் பங்கிற்கு  புவியை சூடு படுத்தும் கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 1.14 டிகிரி செ. வரை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை மூன்றிலிருந்து ஐந்து டிகிரி  செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் பூமி சூடாகும் பொழுது கொசு போன்ற பூச்சி இனங்கள்  பெருகும் இதனால் பல நோய்கள் பரவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் இதனால் உணவு உற்பத்தி குறையும் உணவு உற்பத்தி குறையும் போது ஏழை எளிய  மக்கள்தான் பட்டினி கிடக்க நேரிடும் தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளிலேயே  இந்த மனித குலம் அழிவதை தங்கள் கண்ணால் காணப்போகிறார்கள் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் இனி நமக்கு இருக்கும் ஒரே ஒரே வாய்ப்பு பேரிடர்களுக்கு இடையே எவ்வாறு வாழ்வது என்பதுதான் எளிமையான வாழ்க்கையும் குறைவான நுகர்வும் தான் இந்த பூமியை காக்கும் பூமித்தாயின் மூச்சுக் குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மைக்ரோ பிளாஸ்டிக் என்ற பெயரில் தாய்ப்பாலிலும் ரத்தத்திலும் மனித விந்தணுக்களிலும் கலந்துள்ளது மனித குலத்தின்  அழிவிற்கு இயற்கை வழி வகுத்து விட்டது என்றே கூறலாம் இயற்கையை நாம் ஒரு அடி கொடுத்தால் இயற்கை திருப்பி 100 மடங்கு  வலிமையுடன் தாக்கும் என்று கூறுவார்கள் அதைத்தான் நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம் வயநாடு பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் இனி கடவுள் கூட பூமியை காப்பாற்ற முடியாது என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் திரு.ராஜு  அவர்கள்  கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad