நீலகிரி மாவட்டம் உதகையில் வாய் பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணித நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. கிறிஸ்டின் பியூலா தலைமை தாங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே .ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கையூட்டும் கணிதம் என்ற நிகழ்ச்சியை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தினார் நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை திருமதி. சாந்தி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு புரியும் சைகை மொழியில் கணித நிகழ்ச்சியை மொழிபெயர்த்து கூறினார் மாணவர்கள் கணிதத்தை மிகவும் உற்சாகத்துடன் கற்றுக் கொண்டனர். பாடல்கள் கணித சூத்திரங்கள் புதிர் கணக்குகள் போன்றவற்றை சாதாரண மாணவர்களை போன்று மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொண்டது பிரமிப்பூட்டுவதாக இருந்தது இது குறித்து ஆசிரியர் திரு. ராஜு அவர்கள் கூறும் போது நாம் சமுதாயத்தின் ஒரு பகுதியை இதுவரை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது இத்தகைய மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை என்று கூறினார் ஆசிரியர் திரு. மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment