வயநாடு மக்களுடன் தமிழக குரல் நீங்களும் இணையலாம் என்று நமது தமிழக குரல் முன்னெடுத்த வயநாடு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்காக
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொணவக்கரை முல்லை நகர் பொதுமக்கள் உடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளீர் நண்பர்கள் குழுவின் திரு. பூபாலன், திரு. சதீஷ், திரு. சிவச்சந்திரன், திரு. விஜய் ஆகியோர்
ஊர்மக்கள் மற்றும் தங்களின் பங்களிப்பாக
*சோப்
*பிரஷ்
*சேனிடரி நாப்கின்
*லைட்டர்
*பிஸ்கட்
*டீ தூள்
*லுங்கி
*வேஷ்டி
*குழந்தை துணிகள்
*நைட்டி
*டவல்
*புடவைகள்
உள்ளிட்ட பொருட்களை தமிழக குரல் நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் திரு. K .A. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கோத்தகிரியில் நேரடியாக வழங்கினர்.
நிவாரண பொருட்கள் வழங்கிய முல்லை நகர் பொதுமக்கள் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் நண்பர்கள் குழுவினருக்கும் தமிழக குரல் செய்திகுழுமத்தின் சார்பிலும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment