கூடலூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகர சாலைகளானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நாம் தமிழர் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு பகிரங்க. வேண்டுகோள் விடுத்து நகரப் பகுதிகள் முழுவதும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.அதில் இன்னும் இரண்டு நாட்களில் இவை சரி செய்யப்படவில்லை என்றால் வரும் ஞாயிறன்று 11.08.2024 அனைத்துக் குழிகளிலும் நாற்று நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment