நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலுக்கா பந்துமை கிராமம் அருகே குன்னூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கிராம மக்களின் நிலங்களை வாங்கி நூற்று கணக்கான வடஇந்திய தொழிலாளர்களை வேலைக்கு வைத்து கொண்டு ஒரு மலையையே குடைந்து வீடுகளை கட்டி விற்பனை செய்து கொண்டு இருக்கிறது ஏற்கனவே அந்த நிறுவனம் பெள்ளட்டி மட்டம் அருகே ஐந்து வருடங்களுக்கு முன்பு வீடு கட்ட மலையை குடைந்த போது வேலை செய்து கொண்டு இருந்த இரு நபர்கள் இறந்துவிட்டனர் அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை
இந்த நிறுவணம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்களை வாங்கி கட்டடங்களை கட்டி இயற்கையை அழித்து கொண்டு இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது போன்ற செயல்களை நிறுத்தினால் மட்டுமே நீலகிரியை பேரழிவினால் காப்பாற்ற முடியும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment