தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பின்படி நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் “என் உயிரினும் மேலான” எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி மாவட்ட அமைப்பாளர் இமயம் சசிகுமார் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நௌபுல், பாபு, முரளிதரன், பத்மநாபன், வினோத்குமார், அகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பேச்சு போட்டியை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் துவக்கி வைத்தார். மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மேலிட பார்வையாளர் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தலைமை கழகத்தின் சார்பில் போட்டிக்கான நடுவர்களாக வேலூர் ரமேஷ், ஆருர் மணிவண்ணன், டான் அசோக் அகியோர் செயல்பட்டனர், கலந்துக்கொண்ட மாணவ – மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துக்கொண்ட மாணவ – மாணவியர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் வரலாற்றை மிகச்சிறப்பாக தங்களது பேச்சுத்திறமையால் வெளிபடுத்தி, நடுவர்கள் மற்றும் மாவட்ட கழகத்தின் பாராட்டை பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலளார் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ஜார்ஜ், உதகை வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, பில்லன், சதக்கத்துல்லா, மோகன்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, ரவி, ராமசந்திரன், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் விஷ்னு, கஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment