எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து கஞ்சா கடத்தியவர்களை கைது செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2024

எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து கஞ்சா கடத்தியவர்களை கைது செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன



  நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு மகேந்திரன் அவர்கள் எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பொழுது குன்னூர் பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக வந்த  தகவலின் பெயரில் திரு மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து குன்னூர் பகுதிக்கு 2 1/2 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து  கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 




இந்த சிறப்பு குழு அமைத்து கஞ்சா கடத்தி வந்த இரு நபர்களை கைது செய்ததற்கு இன்று நமது எமரால்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் திரு மகேந்திரன் அவர்களுக்கு டி ஐ ஜி சரவண சுந்தர் அவர்கள்  தலைமையில் திரு மகேந்திரன் மற்றும் அவரது குழுவினருக்கு சான்றிதழ் மற்றும் 2500 காசோலை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். அவர்களுடன் எஸ் பி  நிஷா நிஸ்சார் அவர்களும் திரு மகேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.  அவரது பணி மேலும் சிறக்க தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...


.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad