நீலகிரி மாவட்டத்திற்க்கு மூன்று நாட்கள் கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.வயநாடு நிலச்சரிவை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கின்றனர் நீலகிரி மக்கள்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தேசிய பேரிடர் மீட்புப்படை நீலகிரியில் தயார்நிலையில் உள்ளது.
ஏற்கனவே நீலகிரி மக்கள் பயப்படுவதற்க்கு ஏற்ப இன்று கோத்தகிரி பகுதியில் அடிக்கடி காலநிலை மாறிக்கொண்டே இருந்தது.திடீரென வெயிலடிப்பது, மேகமூட்டம்வருவது, மறுபடியும் வெயிலடிப்பது, உடனடியாக மழை வருவது, மறுபடியும் வெயிலடிப்பது,மழைவருவது என காலநிலை மாறிக்கொண்டே இருந்தது. மக்களை ஆச்சரியப்படவும் மற்றும் அச்சப்படவும் வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment