நீலகிரி மாவட்ட கழக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார்.
கழக துணை பொது செயலாளர்- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் கழக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்துவது குறித்தும், மாவட்டத்திலுள்ள கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
கூட்ட முடிவில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment